ஊரடங்கினால், பல்வேறு பகுதிகளில் சிக்கித்தவித்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல மத்திய அரசு அனுமதியளித்தது. இதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அவ்வாறு, மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலர் பேருந்து மூலம், கூச் பிஹார் மாவட்டத்திற்குப் பயணித்துள்ளனர்.
துப்குரி பகுதியருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து நேர்ந்ததும், பேருந்து ஓட்டுநர் தலைமறைவாகிவிட்டார். இவ்விபத்தில், 32 இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் காயமடைந்தனர். இவர்கள் அனைவரையும் சரியான நேரத்தில் அம்மாநில காவல் துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையும் படிங்க: தனது இறந்த மகனை காண முடியாமல் கதறிய புலம்பெயர்ந்த தொழிலாளி