அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து கதாசிரியரும், பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தந்தையுமான சலீம்கான் கருத்து தெரிவித்தார். அப்போது அவர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி மத்திய அரசு வழங்கவுள்ள இடத்தில் பள்ளி அல்லது கல்லூரி கட்டலாம் என்று கூறினார்.
இதுகுறித்து அவர், “இந்தக் கதை (அயோத்தி வழக்கு) முடிவுக்கு வந்துள்ளது. பழையதை மீண்டும் மீண்டும் நினைவுக் கூரவேண்டாம். முன்னோக்கி செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். இதுபோன்ற முக்கியமான தீர்ப்பை அறிவித்த பின்னர், அமைதியும், நல்லிணக்கமும் பேணப்படுவது பாராட்டத்தக்கது. பழைய சர்ச்சை தீர்க்கப்பட்டது. இந்த முடிவை என் இதயத்திலிருந்து வரவேற்கிறேன்.
இதுபற்றி (அயோத்தி வழக்கு) இஸ்லாமியர்கள் விவாதம் கொள்ள தேவையில்லை. அதற்கு பதிலாக தங்களுக்கான அடிப்படை பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் குறித்து விவாதியுங்கள். நாம் ஏன், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் குறித்து கேட்கக் கூடாது. என்னிடம் கேட்டால் என் பரிந்துரையாக அந்த 5 ஏக்கர் இடத்தில் பள்ளி, கல்லூரி கட்டுங்கள் என்பேன். நமக்கு தேவை நல்ல பள்ளிகளே. 22 கோடி இஸ்லாமியர்களும் நல்ல கல்வியை பயிலும்போது, நம் பிரச்னையை நாமே தீர்த்துக் கொள்ளலாம்.
நான் பிரதமரின் கருத்தில் உடன்படுகிறேன். இன்று உண்மையில் எங்களுக்கு அமைதி தேவை. சிறந்த கல்வியில் படித்தவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. நல்ல கல்வி கிடைக்காததே, இஸ்லாமியர்களுக்கு உண்மையான பிரச்னை. நான் மீண்டும் சொல்கிறேன். அயோத்தி விவகாரம் முடிந்து விட்டது. இவ்வாறு சலீம்கான் கூறினார்.
இதையும் படிங்க: ராமர் கோயில் கட்ட இஸ்லாமிய அமைப்பு ரூ. 5 லட்சம் வழங்குவதாக அறிவிப்பு