ETV Bharat / bharat

புதுச்சேரியில் விரைவில் பட்ஜெட் தாக்கல் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு - puducherry assembly

புதுச்சேரி : மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய தாமதமானதற்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம் என்றும், விரைவில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் முதலமைச்சர்  நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் விரைவில் பட்ஜெட் தாக்கல்- முதலமைச்சர்

author img

By

Published : Jul 5, 2020, 7:21 PM IST

புதுச்சேரியில் விரைவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், “புதுச்சேரியில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களில் 53 விழுக்காட்டினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை ஏற்பாடுகள் சரியில்லை என்று சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். இவ்வாறு உண்மைக்கு புறமான பதிவுகளை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

ஊரடங்கு உத்தரவு என்பது கரோனா நோய் தொற்றுப் பரவலை குறைக்கும் ஒரு அம்சம்தான். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை ஒன்பது மாதங்கள் பரிசோதனை செய்த பிறகே பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர முடியும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு நாட்களில் மத்திய அரசு நிதி நிலை அறிக்கைக்கு அனுமதி அளிக்க உள்ளது. நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிதியை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கோரிக்கை கடிதத்திற்கு இதுவரை பதில் இல்லை. பட்ஜெட்டிற்கு பின்பு மத்திய அரசு நிதி அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

மாநிலத்தில் பட்ஜெட் தாக்கல் தாமதமானதற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடியே காரணம். விரைவில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.