ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவிவருகிறது. அங்கு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்துவரும் நிலையில், முதலமைச்சர் கெலாட் மீது அதிருப்தி காரணமாக முக்கியத் தலைவரான சச்சின் பைலட், 19 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் கட்சியிலிருந்து விலகினார்.
இதையடுத்து காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், ஆட்சிக்கு ஆதரவளித்துவந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமையும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தது. அதேவேளை ஆறு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு உறுப்பினர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டனர்.
இது விதிமுறை மீறல் எனக் கூறி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ், பாஜக மனுத்தாக்கல் செய்துள்ளன. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தொடர்பாக வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் சி.பி. ஜோஷிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவில் தொடர்கதையாகும் பழங்குடியின பெண்கள் மீதான தாக்குதல்கள் - சந்திரபாபு நாயுடு டிஜிபிக்கு கடிதம்