மக்களவைத் தேர்தல் இதுவரை நான்கு கட்டங்களாக 373 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் ஐந்தாவது வாக்குப்பதிவு இன்று ஏழு மாநிலங்களில் உள்ள 51 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது.
இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. இதில் அனைத்து வாக்காளர்களும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.