தமிழ்நாடு, புதுச்சேரி தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், பிஎஸ்என்எல் நிர்வாகம் புதிய டெண்டர் முறையான அவுட்சோர்சிங் முறையை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தப்பட்டது. நிரந்தர ஊழியருக்கு வழங்கும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்கு குறைவாக ஒப்பந்த ஊழியர்களுக்குச் சம்பளமாக தரப்படுகிறது. அந்த ஊதியத்தையும் கடந்த 10 மாதங்களாக நிர்வாகம் வழங்காமல் உள்ளனர்.
நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனவும்; தற்போதுள்ள ஊழியர்களை பணி நீக்கம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் அச்சங்க மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். இதில், சங்கத்தைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டு, சமூக இடைவெளியைக் கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் பூரண குணம் - மல்லாடி கிருஷ்ணாராவ்!