இஸ்லாமியத்தில் பிரபலமான பக்ரீத்(ஈத்-உல் ஜுஹா) பண்டிகை முன்னிட்டு, இந்தியா- பங்களாதேஷ் எல்லையில் கால்நடைகள் கடத்தப்படுவது அதிக வாய்ப்புள்ளதால் எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
இதுதொடர்பாக பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கூறுகையில்," கடந்த சில ஆண்டுகளாக சரியான விழிப்புணர்வு காரணயாக கால்நடைகள் கடத்தப்படுவது கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. இருப்பினும் தற்போது பண்டிகை வருவதை முன்னிட்டு பாதுகாப்பை அதிகரித்துள்ளோம். மழை காலங்களில் நைட் விஷன் கேமரா, ஸ்பீடு படகுகள் பயன்படுத்தவுள்ளது குறிப்பாக அதிக கடத்தல் நடைபெறும் ஹாட் ஸ்பாட் இடங்களான வேப்ப டீட்டா, ஹருடங்கா, மடங்கட், சோவாபூர் போன்ற இடங்கள் பட்டாலியன்களின் முழு கண்காணிப்பில் உள்ளது. இதுமட்டுமின்றி எல்லை பாதுகாப்பு படை, உள்ளூர் காவலர்களுடன் இணைந்து ஆற்று பகுதிகளில் முகாம்களை அமைத்து ஆற்று பகுதிகளில் கால்நடை இறக்கப்பட்டு நடக்கும் கடத்தலை தடுக்கவுள்ளதாக" எனத் தெரிவித்தார்.