இரண்டு படகுகள்
குஜராத் மாநிலத்தின் கூச் மாவட்டத்தின் சர் கிரேக் கடற்கரைப் பகுதியில் இரண்டு படகுகள் கேட்பாரற்று கிடந்தன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எப்) சம்பவ இடத்திற்கு விரைந்து படகுகளை கைப்பற்றினர்.
அப்போது இரண்டு படகுகளும் பாகிஸ்தானை சேர்ந்தவை என்பது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து பி.எஸ்.எப். வீரா்கள் கூறும்போது, சர் கிரேக் பகுதியில் உள்ள லட்சுமண் பாயிண்ட் பகுதியில் இந்த படகுகள் கண்டெடுக்கப்பட்டன.
அந்த படகுகளில் மீன்பிடி கருவிகள் மட்டும் கிடைத்தன.
உளவுத் துறை எச்சரிக்கை
வேறு எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. படகுகளில் இருந்து அடையாளம் தெரியாத நபர்கள் யாரேனும் நாட்டுக்குள் புகுந்தனரா? என்பன போன்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். குஜராத் கடலோர பகுதிகளில் கடந்த மாதத்தில் இருந்து, தொடர்ச்சியாக பாகிஸ்தான் படகுகள் கரை ஒதுங்குகின்றன, என்றனர்.
2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலின் போதும், பயங்கரவாதிகள் கடற்கரை மார்க்கமாகவே நாட்டுக்குள் புகுந்தனர்.
தற்போதும் அவ்வாறான அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருவது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிக்கலாமே
யாரும் இந்தியாவுக்குள் நுழைய வேண்டாம்: இம்ரான் கான் அறிவுறுத்தல்