மேற்கு வங்கம் மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பங்களாதேஷ் - இந்திய எல்லையில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், பங்களாதேஷ் படை வீரர் ஒருவர், தான் வைத்திருந்த ஏ.கே. 47 துப்பாக்கியால், இந்திய வீரர்களை நோக்கி சுட ஆரம்பித்தார்.
இதில், இந்திய பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால் எல்லையில் பதற்றம் நிழவுகிறது. இது குறித்து இருநாட்டு அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.