பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று ஸ்வச் பாரத் திட்டத்தை பிரபல படுத்தும் முயற்சியாக பாதுகாப்புப் படையினர் மோப்ப நாய்களைக் (Dog squad) கொண்டு குப்பைகளை சுத்தம்செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இந்த விழிப்புணர்வில் பங்கேற்ற நாய்கள் பி.எஸ்.எஃப். எனப்படும் எல்லை பாதுகாப்புப் படையினருடன் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சிறப்புப் பயிற்சி பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. தூய்மைப் பணியில் ஈடுப்பட்ட நாய்களுக்குக் குப்பையை எடுத்து குப்பைத் தொட்டியில் போட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது எனப் பாதுகாப்புப் படை அதிகாரி ஜி.எஸ். நாக் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ”நாய்களாகிய நாங்கள் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறோம். மனிதர்களாகிய நீங்களும் இந்த முயற்சியில் ஈடுபட வேண்டும்” என்ற வாசகம் தாங்கிய குப்பைத் தொட்டியை நாய்கள் வாயில் கவ்வியபடி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரின் பார்வையை கவர்ந்தது.
இதையும் படிங்க: விமானத்தில் காந்தியின் ஓவியம் வரைந்து சிறப்பித்த ஏர் இந்தியா!