டெல்லி: அனைத்து பிஎஸ்-6 மோட்டார் வாகனங்களில் பதிவு விவரங்களை கொண்ட ஒரு செ.மீ அளவு பச்சை நிற ஸ்டிக்கரை அரசாங்கம் கட்டாயப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 1, 2020 முதல் இது நடைமுறைக்கு வர உள்ளது. பிஎஸ்-6 உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வாகனங்கள் மூன்றாவது பதிவுத் தட்டில் மேலே 1 செ.மீ அளவுக்கு பச்சை நிற ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் வாகனங்கள் (உயர் பாதுகாப்பு பதிவு தகடுகள்) உத்தரவு, 2018 ஐ திருத்தி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2019 ஏப்ரல் 1 முதல் அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் டேம்பர்-ப்ரூஃப், உயர் பாதுகாப்பு பதிவு தகடுகள் (எச்.எஸ்.ஆர்.பி) பொருத்தப்படும் என்று அரசாங்கம் கூறியிருந்தது.
இந்த ஸ்டிக்கர் ஆனது புதிதாக தயாரிக்கப்பட்ட வாகனத்தின் விண்ட்ஷீல்ட்டின் உட்புறத்தில் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.