உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாஜக தலைவரான சஞ்சய் அகர்வாலின் அண்ணன், அஜய் குமார் அகர்வால்.
முசாஃபர்நகர் பகுதியில் வசிக்கும் இவர், நிதியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த அஜய் குமார், நேற்று தனது வீட்டில் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியையால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தொடர்ந்து இச்செய்தி அறிந்து, அம்மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால், புதானா சட்டமன்ற உறுப்பினர் மாலிக் உள்ளிட்ட பல பாஜக தலைவர்களும் நேரில் சென்று சஞ்சய் அகர்வாலுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்தனர்.
மேலும் அஜய் குமார் அகர்வாலின் உடல், உடற்கூறாய்விற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : பாபர் மசூதி இடிப்பு வழக்கு: குற்றஞ்சாட்டப்பட்ட 6 பேர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்