சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவிற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேட்டியளித்தார். அதில் தாம் தாக்கரே குடும்பத்தின் பாரம்பரியத்தை மீறிவிட்டதாகத் தெரிவித்திருந்தார். எனினும் தனது தந்தையின் கனவுகளை நனவாக்க இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
சாம்னாவில் உத்தவ் தாக்கரேவின் பேட்டி வருமாறு:
அரசியலில் பதவியை ஏற்றுக்கொண்டதன் மூலம் தாக்கரே குடும்ப பாரம்பரியத்தை மீறிவிட்டேன் என்பது உண்மைதான். எனினும் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாமல் என்னால் சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது.
அவரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற, இந்தப் பொறுப்பு இன்றியமையாதது என நினைத்தேன். ஆதலால் இந்தப் பதவியை நான் ஏற்றுக்கொண்டேன். நான் இதுவரைக்கும் எனது தந்தைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இது ஒருபடி மட்டுமே.
இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
கடந்தாண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அளவிற்கு யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்நிலையில் திடீர் அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவில் சிவசேனா ஆட்சி அமைத்தது.
இதனை சிவசேனாவின் இயற்கை கூட்டணி என்று வர்ணிக்கப்பட்ட பாஜக, மூன்று சக்கர ஆட்சி என்று கிண்டல் செய்தது. தற்போது இந்த ஆட்சி 100 நாள்களை வெற்றிகரமாக நெருங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: போர்வெல் மரணத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - உச்ச நீதிமன்றம் கேள்வி