ETV Bharat / bharat

ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு! - delhi firing latest

jamia milia Islamia university firing, ஜாமியா மிலியா பல்கலைக்கழகம் துப்பாக்கிச் சூடு
jamia milia Islamia university firing
author img

By

Published : Feb 3, 2020, 12:50 AM IST

Updated : Feb 3, 2020, 7:36 AM IST

00:35 February 03

டெல்லி : ஜாமிய மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் 5ஆம் வாயில் கதவுக்கு அருகே அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபர்கள் சிவப்பு நிற இருசக்கர வாகனத்தில் வந்ததாகவும், அதில் ஒருவர் சிவப்பு நிற ஜாக்கெட் அணிந்திருந்ததாகவும் அப்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. நேற்று இரவு சரியாக 11.30 மணி அளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாக டெல்லி ஒக்லா சட்டப்பேரவை தொகுதி முன்னாள் எம்எல்ஏ தெரிவித்தார்.

அப்பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறுகையில், "துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது, இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தப்பிச் செல்வதைப் பார்த்தோம். பிறகு வாகன எண்ணைக் குறிப்பெடுத்துக்கொண்டு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தோம்" என்றார்.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தலைநகரில் நடந்த மூன்றாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக கடந்த விழாக்கிழமை டெல்லி ராஜ்காட்டை நோக்கி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் பேரணியின் ஈடுபட்டபோது அவர்களை குறிவைத்து சிறார் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இரண்டு நாள் கழித்து (பிப்ரவரி 1ஆம் தேதி), டெல்லி ஷாஹீன் பாக் பகுதியில் 25 வயது இளைஞர் ஒருவர் வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தினார். 

ஞாயிறு இரவு ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது. நிகழ்விடத்துக்கு வந்த காவல் துறையினரை பல்கலைக்கழக மாணவர்கள் விரட்டியடித்தனர். பின்னர், பல்கலைக்கழகம் எதிரே காவல் துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியவாறு தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஷாஜத் அகமது என்ற மாணவர் கூறுகையில், "இச்சம்பவத்தால் நாங்கள் பின்வாங்க மாட்டோம். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்றார். 

இதையும் படிங்க : ‘சிஏஏ சல்லடைப் போன்றது’ - கனிமொழி எம்பி

Intro:Body:

JMU Firing -

Conclusion:
Last Updated : Feb 3, 2020, 7:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.