இந்திய - ரஷ்ய கூட்டு நிறுவனமான பிரம்மோஸ் ஏரோ ஸ்பேஸ், கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் மாவட்ட நிர்வாகத்திற்கு தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள், என் -95 முகமூடிகளை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஏவுகணை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சுதீர் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா வைரஸிற்கு எதிராக இந்தியா போராடிவரும் நிலையில், எங்களது நிறுவனத்தின் சார்பாக மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஜபல்பூருக்கு ஐநூறு தனிமனித பாதுகாப்பு உபகரணங்கள், இரண்டாயிரத்து 500 என் -95 முகக் கவசங்கள், 30 உடல் வெப்ப பரிசோதளைக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்திற்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.
இந்த உபகரணங்கள் அனைத்தும் செஞ்சிலுவை சங்க சங்க செயலாளர் ஆஷிஷ் தீட்சித், மாவட்ட ஆட்சியர் பாரத் யாதவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மலிவு விலை 'கரோனா கண்டறிதல் சோதனை உபகரணம்' கண்டுபிடிக்கும் முயற்சியில் ஐஐடி