ETV Bharat / bharat

பிரம்மபுத்திர சுரங்கப்பாதையின் மூலம் இந்தியாவின் இலக்காக மாறும் சீனா - பிரம்மபுத்திர சுரங்கப்பாதை

2028க்குள் பிரம்மபுத்திரா சுரங்கப்பாதை சீனாவின் அனைத்து பகுதிகளையும் இந்தியாவின் அணுசக்தி வரம்பிற்குள் கொண்டுவர உதவும்

பிரம்மபுத்திரா
பிரம்மபுத்திரா
author img

By

Published : Jul 26, 2020, 7:13 PM IST

2028ஆம் ஆண்டு வாக்கில் அசாமில் பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ் 15 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை சுரங்கப்பாதையை அமைக்கும் ஒரு லட்சியத் திட்டத்தை சீனாவின் மிகப்பெரிய நகர மற்றும் உலகளாவிய வணிக மையமாக விளங்கும் ஷாங்காய் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட முழு சீனாவையும் இந்தியாவின் ஏவுகணைகளின் வரம்பிற்குள் திறம்பட கொண்டு வருவதில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

சீனாவை எதிர்கொள்வதற்காக இந்தியாவின் வடகிழக்கில் பிரம்மபுத்திரா ஆற்றின் தென் கரையில் இந்தியா முழுக்க முழுக்க சக்திவாய்ந்த மற்றும் அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்தியுள்ள நிலையில், அவற்றை வடக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்திற்கு நகர்த்துவது என்பது கிட்டத்தட்ட இந்திய ஏவுகணைகளின் தாக்குதல் வரம்பிற்குள் மொத்த சீனாவை கொண்டு வர உதவும்.

மேலும், அருணாச்சல பிரதேசத்தின் உயரமான மலைகள் மற்றும் கடினமான நிலப்பரப்புகளில் இத்தகைய ஏவுகணை அமைப்புகளை நிலைநிறுத்துவது என்பது சிறந்த மறைவிடத்தையும் பாதுகாப்பையும் அளிக்கும்.

அதற்காக ஏவுகணை அமைப்புகளை கொண்டு செல்வதற்கு எளிதான இயக்கம் மற்றும் மறைப்பை உறுதி செய்வது மிக முக்கியம். அதன்படி போர் தந்திர கண்ணோட்டத்தில் பிரம்மபுத்திரா நதி சுரங்கப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

திட்டமிடப்பட்ட சுரங்கப் பாதை, ஆற்றின் தென் கரையில் உள்ள நுமலிகர்-ருடன் வடக்கே அருணாச்சலப்பிரதேசம் அருகில் இருக்கும் கோஹ்பூரை இணைக்கும்.

ஏவுகணை அமைப்புகள் இயக்கத்தை தவிர சுரங்கப் பாதை வீரர்கள் மற்றும் கனரக பீரங்கிகள் உட்பட போர் உபகரணங்களை உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு பகுதி அல்லது சீனாவுடனான உண்மையான எல்லைக்கு எதிரிக்கு தெரியாமல் கொண்டு செல்வதற்கு படைதிறனை அதிகரிக்க ஏற்றதாக இருக்கும்.

கிடைத்துள்ள தகவல்களின்படி, அணுசக்தி திறன் கொண்ட அக்னி2, அக்னி3 மற்றும் பிரமோஸ் ஏவுகணை அமைப்புகளை பராமரிக்கும் இந்தியாவின் இராணுவ தளங்கள் அஸ்ஸாமில் உள்ளன.

நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி2 3,500 கி.மீ வரை செயல்பாட்டு வரம்பைக் கொண்டுள்ளது, அதே சமயம் அக்னி3 இடைநிலை வீச்சு 5,000 கி.மீ வரை செயல்பாட்டு வரம்பை கொண்டுள்ளது. மறுபுறம், 300 கி.மீ தூரம் செல்லும் பிரம்மோஸ் கப்பல் ஏவுகணை உள்ளது. சாலை மற்றும் இரயில் உள்ளிட்ட பல்வேறு இடம்பெயரும் தளங்களில் இருந்து ஏவப்படுவதற்கான திறன் அனைத்திலும் உள்ளது.

இந்தியாவின் தொலைதூர எல்லைகளை தாக்கக்கூடிய, குறைந்தபட்சம் 104 அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளை சீனா நிலைநிறுத்தியுள்ளது

இந்தியாவுக்கு எதிராக சீன இராணுவத்தின் போர்த்தந்திர ராக்கெட் படை (PLASRF) நிலைநிறுத்தியுள்ள இரண்டு முக்கிய அணு ஆயுத ஏவுகணைகளில் டோங்-ஃபெங் 21 மற்றும் டோங்-ஃபெங் 31 ஆகியவை அடங்கும்.

DF21 சுமார் 2,000 கிமீ வரம்பைக் கொண்டது. DF31 இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. DF31 7,000 கிமீ வரம்பையும், DF31A 11,000 கிமீ வரை வரம்பையும் கொண்டுள்ளன.

DF21க்கான இந்தியாவை மையமாகக் கொண்ட ஏவுகணை தளங்கள் கோர்லா, உய்குர் தன்னாட்சி பகுதியின் ஜின்ஜியாங் (தளம்56) மற்றும் யுன்னான் மாகாணத்தின் கீழ் உள்ள ஜியான்ஷுய் (தளம்53) ஆகிய இடங்களில் உள்ளன. மறுபுறம், DF21 மற்றும் DF31 ஆகிய இரண்டும் கிங்காய் மாகாணத்தில் லியூகிங்கோவில் (தளம்56) நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

சுரங்கப்பாதை திட்டத்திற்காக இந்தியா சமீபத்தில் அதன் கொள்கை ரீதியான ஒப்புதலையும் அளித்துள்ள நிலையில், சுரங்கப்பாதையை 2028-க்குள் கட்டிமுடிக்கும் காலக்கெடுவுடன் வேண்டுகோள் முன்மொழிவு (RFP)க்கான உலகளாவிய ஒப்பந்தங்கள் 2019 அக்டோபர் 15ஆம் தேதி நிறைவடைந்தது, கடந்த ஆண்டு, நாடாளுமன்றக் குழுவுக்கு சுரங்கப்பாதை திட்டம் குறித்த ஒரு பவர்பாயிண்ட் விளக்கக்காட்சியை எல்லை சாலைகள் அமைப்பு (BRO) வழங்கியது.

திபெத் தன்னாட்சி பகுதியுடன் (TAR) 1,126 கி.மீ நீளமுள்ள எல்லையைப் பகிர்ந்து கொள்ளும், மலைகளில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசம், இந்தியாவின் வடகிழக்கு பகுதியுள்ள உள்ள மிகப்பெரிய மாநிலமாகும். இந்த மாநிலத்தின் மீது தனக்கு பிராந்திய அதிகாரம் இருப்பதாகக் கூறி சீனா அதை ‘தெற்கு திபெத்’ என்று அழைக்கிறது.

ஏற்கனவே அதன் பெரிய அளவு மற்றும் ஆவேச வெள்ளத்தால் அறியப்படுகிற பிரம்மபுத்திரா நதியில் தெற்கு அசாமை வடக்கு அசாமுடன் இணைக்கும் ஆறு பாலங்கள் உள்ளன. ஆனால் இந்த பாலங்கள் சீனாவுடனான ஒரு போர் ஏற்படும் சூழ்நிலை வந்தால் தாக்குதல் இலக்காக வைக்கப்படக்கூடிய இடங்களில் முதலாவதாக இருக்கும்.

இதையும் படிங்க: கார்கில் போர்: பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியில் வென்ற இந்தியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.