அஸ்ஸாமில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், மாநிலத்தின் 25 மாவட்டங்களில் சுமார் 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவித்துவரும் மக்களை தொடர்ந்து மீட்டுவருகின்றனர்.
இந்நிலையில், பிரம்மபுத்திரா ஆற்றில் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்துவருகின்றது. இதன் காரணமாக, உமாநந்தா கோயிலுக்கு இயக்கப்படும் படகு சவாரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கவுகாத்தியிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், காசிரங்கா உயிரியல் பூங்காவில் 70 விழுக்காடு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அங்குள்ள விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன.