உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளைஞர், மும்பையில் ஒரு பெண்ணுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்த ஜோடிக்கு விரைவில் திருமணம் நடப்பதாக இருந்தது.
இதனிடையே, திடீரென அந்தப் பெண்ணின் தந்தைக்கு உடல்நலக் கோளாறு ஏற்படவே சிந்துர்க் மாவட்டத்திலுள்ள தன் கிராமத்துக்குச்செல்ல நேர்ந்தது. அதற்குள் ஊரடங்கு அமலுக்குவர கிராமத்திலேயே சிக்கிக் கொண்டார்.
காதலியைப் பார்க்கமுடியாமல் தவித்து வந்த இளைஞர், எது நடந்தாலும் சரி என முடிவெடுத்து பொடி நடையாகவே சுமார் 600 கிலோ மீட்டர் பயணித்து தன் காதலியைச் சந்துத்துப் பேசியுள்ளார்.
இதையடுத்து, மும்பைக்குத் திரும்பிச் செல்ல முடிவெடுத்த அந்த ஜோடி அடுத்த நாளே பைக் மூலம் சிங்துர்க் மாவட்ட எல்லையைக் கடந்து, ரத்நகிரி மாவட்டத்தை அடைந்தனர்.
இதனிடையே, அம்மாவட்டத்தில் உள்ள லான்ஸா பகுதியில் சிங் போஜன் கேந்த்ரா என்ற உணவகத்தில் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த காதலர்களைப் பார்த்து சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை அழைத்து விசாரித்தனர்.
பின்னர், அவர்களை லான்ஸா பகுதியில் தனிமைப்படுத்தினர். மேலும், அந்தப் பெண்ணின் கிராமத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க : நெருக்கடியான நேரத்தில் விலையேற்ற நடவடிக்கை கொடூரமானது - சிதம்பரம்