மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஆம்பன் புயலால் பாதிக்கப்பட்ட பர்கானாஸ் மாவட்டம் பசிர்ஹத் பகுதியை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா, ”ஆம்பன் போன்ற பேரிடர் காலங்களில் மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து மக்களுக்குப் பணியாற்ற வேண்டும். புயலால் பர்கானாஸ், ஹவுரா, ஹூக்ளி, நடியா உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 80 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நிவாராணத் தொகையாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. கூடுதல் நிவாரண நிதி பிரதமரிடம் கேட்கப்பட்டுள்ளது” என்றார்.
இதையும் படிங்க: ஆம்பன் புயல் நிவாரணமாக மேற்கு வங்கத்திற்கு ரூ.1,000 கோடி!