மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் அஜீஸ் கான். இவர் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்பாக இந்து - இஸ்லாமியர் ஒற்றுமையைப் பறைசாற்றும் விதமாக தனது மகனுக்கு கிருஷ்ணர் என்ற பெயரை சூட்டியுள்ளது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து கடவுளான கிருஷ்ணர் பிறந்த ஜென்மாஷ்டமி நாளில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. கிருஷ்ணர் பிறந்த நாளாக கருதப்படும் அந்நாளில் பிறந்ததால் தன் மகனுக்கும் கிருஷ்ணர் என்று பெயர் சூட்டியுள்ளார். அடிப்படையில், இஸ்லாமியரான அவரது குடும்பத்தினர் முதலில் இந்த பெயரை வைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி அவர் பிடிவாதமாக தனது மகனுக்கு அந்த பெயரை சூட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அஜீஸ் கான், "12 ஆண்டுகளுக்கு முன்பு ஆகஸ்ட் 23, 2008 அன்று எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. என் மனைவிக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் பிரவீன் ஜாடியா, ஒரே படிவத்தை வழங்கி குழந்தையின் பெயரை அதில் நிரப்பும்படி கேட்டார். நான் உடனடியாக எங்கள் மகனுக்கு கிருஷ்ணா என்று பெயரிட்டேன். அவன் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி என்பதால் அந்த பெயரை வைத்தேன்.
மருத்துவர்களும் பிற குடும்ப உறுப்பினர்களும் இதை எதிர்த்த போதிலும், ஒரு தந்தைக்கு தனது குழந்தைக்கு எந்த பெயரையும் வைக்க உரிமை உண்டு என்று அவர்களிடம் கூறினேன். யானிகி 'காஃபிர்' என்ற மற்றொரு பெயரை குழந்தைக்கு வைக்க சொல்லி எனது தாயார் பரிந்துரைத்திருந்தார். ஆனாலும் நான் அதை மாற்றவில்லை" என்று கூறினார்.