ETV Bharat / bharat

'எல்லைப் பதற்றங்கள் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படவேண்டும்' - டி.ராஜா - indo-china border issue

டெல்லி: இந்திய - சீன எல்லையில் நிகழும் மோதல்கள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலம் சரிசெய்யப்படவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

Border conflicts should be avoided through political dialogues: CPI GS Raja

author img

By

Published : Jun 18, 2020, 4:59 PM IST

Updated : Jun 18, 2020, 5:50 PM IST

இந்திய - சீன எல்லைப் பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து எல்லையில் நிலவும் பதற்றம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 19) நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்த நிலையில், ஈடிவி பாரத் செய்தியாளரைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா பேசுகையில், 'நமது அண்டை நாடுகள் உடனான உறவு முறை, தற்போது இயல்பான முறையில் இல்லை. நேபாளம், பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகள் உடனான உறவுகளைப் பலப்படுத்துவது அவசியம். எனவே, இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக முடிவுகளை எட்டவேண்டும்.

இந்திய - சீன எல்லையில் நிகழும் மோதல்கள் குறித்து, தற்போது எந்தக் கருத்தும் கூற இயலாது. நாளை(ஜூன் 19) பிரதமர் தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு பிறகே, பிரதமரின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்க முடியும்.

நாளை(ஜூன் 19) நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எல்லை விவகாரங்கள் தொடர்பான, எங்களது ஆலோசனைகள் அனைத்தும் முன்வைக்கப்படும்.

எங்கள் கட்சியைப் பொறுத்தவரை, அண்டை நாடுகளுடனான பிரச்னைகள் அனைத்தும் பேச்சுவார்த்தை மூலமும், ராஜதந்திர நடவடிக்கைகள் மூலமும் தீர்க்கப்படவேண்டும்' என்றார்.

Last Updated : Jun 18, 2020, 5:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.