புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் உள்ள நமச்சிவாயம், புதுவை மணவெளி பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அமைச்சர் நமச்சிவாயம் வீட்டில் வெடி குண்டு இருப்பதாகக் கூறிவிட்டு தொடர்பைத் துண்டித்துள்ளார்.
இதனையடுத்து வில்லியனூர் காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் அமைச்சர் வீட்டில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். சோதனையின் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது புரளி என்பது தெரிய வந்தது.
இதன்பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டது யார் என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
புதுவை சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி வீட்டுக்கு கடந்த 2ஆம் தேதி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் கூனிமேடை சேர்ந்த புவனேஷ்வர் என்பவர்தான், அமைச்சர் நமச்சிவாயம் வீட்டிலும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இந்தச்சூழலில் புவனேஷ்வரை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடான செயல்'- எவிடன்ஸ் கதிர்