புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையங்களில் நேற்று வெடிகுண்டு வைத்திருப்பதாக செல்போன் மூலம் மிரட்டல் வந்துள்ளது. ஆனால், அது புரளி என்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறையிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து, சிறைச்சாலையில் சிறப்பு அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில், 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கார் திருட்டு வழக்கில் கைதாகி சிறையிலிருக்கும் டெல்லியைச் சேர்ந்த நித்திஷ்குமார் செல்போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து காலாப்பட்டு காவல் துறையினர், நித்திஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலியோ சொட்டு மருந்தால் குழந்தை இறப்பு: கதறும் பெற்றோர்!