கத்தார் நாட்டில், ஆப்கானிஸ்தான் அரசு, தலிபான் அமைப்புக்கிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தை தொடங்கியதிலிருந்தே, ஆப்கானிஸ்தான் நாட்டில் வன்முறை, வெடிகுண்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், குந்துஸ் நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். இயக்குநரகத்தின் துணை தலைவர் காரில் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது. துணை தலைவர் காரில் இல்லாதபோது, குண்டு வெடித்ததாகக் கூறப்படுகிறது.
காரை ஓட்டி வந்த ஓட்டுநர் உள்பட நால்வர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இதையும் படிங்க: மகாராஷ்டிராவில் நக்சல்கள் படுகொலை