ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ நகரைச் சேர்ந்தவர் புக்காலால் காஸி (42). இவர் மார்ச் ஆறாம் தேதி திடீரென உயிரிழந்தார். பட்டினி சாவால்தான் இவர் உயிரிழந்தார் என தகவல் வெளியானது. இதுகுறித்து அவரின் மனைவி ரேகா தேவி கூறுகையில், "கடந்த சில நாள்களாகவே எங்கள் வீட்டில் உணவு செய்யவில்லை. எங்கள் வீட்டில் குடும்ப அட்டையோ, ஆயுஷ்மான் அட்டையோ இல்லை. சமைப்பதற்கு எந்த பொருளும் வீட்டில் இல்லை" என்றார்.
ரேகாவின் கருத்தை மறுத்த அரசு நிர்வாகம், உடல்நலக்குறைவால் புக்காலால் உயிரிழந்ததாகத் தெரிவித்தது. இதுகுறித்து மாவட்ட ஆணையர் முகேஷ் குமார் கூறுகையில், "புக்கலால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். பெங்களூருவில் வேலை செய்துவந்த அவர் ஆறு மாதங்களுக்கு முன்புதான் வீடு திரும்பினார். உடல்நலக்குறைவால் அவர் உயிரிழந்தாரே தவிர, பட்டினி சாவால் அல்ல" என்றார்.
இந்நிலையில் புக்காலாலின் மரணம் குறித்து விசாரணை செய்ய ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் தலைமைச் செயலர் அருண் சிங், காவல் துணை ஆணையர் உள்ளிட்ட பல அரசு அலுவலர்கள் புக்கலாலின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'என்னை மன்னிச்சிடு, அம்மாகிட்ட போ' - அம்ருதாவின் தந்தை இறப்புக்கு முன் எழுதிய கடிதம்