ஜார்கண்ட் மாநிலம், போகரோ மாவட்டத்தில் பட்டினியால் புகால் காசி (42) என்பவர் தனது வீட்டில் இறந்துகிடந்தார். அவர் பட்டினியால் தான் இறந்துள்ளார் என பலர் குற்றம் சாட்டிய நிலையில், இது குறித்து விசாரணை நடத்த அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
உயிரிழந்தவரின் மனைவியிடம் விசாரணை நடத்தியபோது, கடந்த சில நாட்களாகவே சாப்பிட உணவில்லாமல் இருந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் ரேஷன் கார்டு இல்லாததால் அரசு வழங்கும் இலவச பொருள்களும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்த போது, அவர் இரத்த சோகையால் இறந்துள்ளார். ஆறு மாதம் முன்பு வரை அவர் பெங்களுருவில் வேலை புரிந்தார் என்றும் இரத்த சோகைக்காக சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இறந்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஜார்கண்ட் மாநில முதலமைச்சர், தவறிழைத்வர்கள் குறித்து நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மத்தியப் பிரதேச அமைச்சரவை கலைப்பு