கொல்கத்தாவில் பெலியகட்டா பகுதியில் வீட்டிலிருந்து காணாமல்போன இரண்டு மாத பெண் குழந்தையின் சடலம் அருகிலுள்ள பாதாள சாக்கடையிலிருந்து இன்று கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல் துறையினர் குழந்தையில் தாயிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குழந்தையின் தாய், "நானும் குழந்தையும் வீட்டில் தனியாக இருந்தபோது 26ஆம் தேதி மதியம் அடையாளம் தெரியாத நபர் உள்ளே நுழைந்து எனது குழந்தையை கடத்திச் சென்றார். மேலும் என் குழந்தையுடன் தப்பிச் செல்லும்போது அவர்களால் தாக்கப்பட்டேன்" எனக் கூறியிள்ளார்.
விசாரணையை தீவிரப்படுத்தியபோது, அந்தப் பெண்ணின் பதில்களில் பல முரண்பாடுகள் இருந்த காரணத்தால் காவல் துறையினர் அவரிடம் அதிகமாக கேள்வி கேட்கத் தொடங்கினர். பின்பு பல மணி நேரம் கழித்து குற்றத்தைச் தானே செய்ததாக ஒப்புக்கொண்டார்.
விசாரணையின்போது அந்தப் பெண் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது. தற்போது அவரை கைதுசெய்துள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.