ETV Bharat / bharat

நேபாளத்துக்கு சுற்றுலா சென்று உயிரிழந்த கேரளாவைச் சேர்ந்தவர்களின் உடல்கள் தகனம்

கேரளா: நேபாளத்திற்கு சுற்றுலா சென்று உயிரிழந்த கேரளா குடும்பத்தினரின் உடல்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு தகனம்செய்யப்பட்டது.

tourism
tourism
author img

By

Published : Jan 24, 2020, 12:02 PM IST

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் கொண்ட குழு நேபாளத்தின் போகாராவுக்கு சுற்றுலா சென்றது. அங்கு, ஜனவரி 20ஆம் தேதி இரவு எவரெஸ்ட் பனோராமா என்ற சொகுசு விடுதியில இவர்கள் தங்கினர். இதில், பிரவீன் கிருஷ்ணன் நாயர்-சரண்யா, ரஞ்ஜித் குமார்-இந்து லட்சுமி பீதாம்பரம் ஆகிய தம்பதியினர் தங்களது குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேர் ஒரே அறையில் தங்கினர்.

அடுத்த நாள் காலை (செவ்வாய்க்கிழமை) இந்த அறையில் இருந்தவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த விடுதி ஊழியர்கள், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே எட்டு பேரும் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

பொதுவாக குளிரான அப்பகுதிகளில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அறையை வெதுவெதுப்பாக வைத்திருக்க கேஸ் ஹீட்டர்கள் இருப்பது வழக்கம். ஜன்னல்கள், கதவுகள் அனைத்தும் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், அறையில் உள்ள கேஸ் ஹீட்டரை பயன்படுத்தியபோது அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இவர்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில், உயிரிழந்த எட்டு பேரின் உடல்கள் காத்மாண்டு மருத்துவமனைக்கு விமானத்தில் எடுத்துச்செல்லப்பட்டு, உடற்கூறாய்வு நடத்தப்பட்டன. இதையடுத்து, அந்த உடல்கள் கேரள மாநிலத்துக்கு நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.

பிரவீன்-சரண்யா தம்பதி அவர்களது குழந்தைகள் மூன்றுபேரின் உடல்கள் திருவனந்தபுரத்துக்கும், ரஞ்ஜித் குமார்-இந்து லட்சுமி பீதாம்பரம் தம்பதியினர், அவர்களது குழந்தைகளின் உடல்கள் கோழிக்கோடுக்கும் அனுப்பிவைக்கப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஐந்து பேர் குழு ஒன்றை நேபாள சுற்றுலாத் துறை அமைத்துள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த நேபாள சுற்றுலாத் துறை ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது. இந்தக் குழு 15 நாள்களில் அதன் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்.

நேபாளத்திற்கு சுற்றுலா சென்று உயிரிழந்த கேரளா குடும்பத்தினரின் உடல்கள் தகனம்

பிரவீன்-சரண்யா தம்பதி அவர்களது குழந்தைகள் மூன்று பேரின் உடல்கள் சொந்த ஊரான செங்கோட்டுகோணத்தில் உள்ள அவர்களது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு திரளாகக் கூடிய மக்கள் அவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவர்களது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு உடல் தகனம்செய்யப்பட்டது.
இதில் மூன்று குழந்தைகளும் ஒன்றாக தகனம்செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க: அதிரும் இன்ஸ்டாகிராம் - இளம்வயது ரத்தன் டாடா

Intro:...

Body:...

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.