ETV Bharat / bharat

கரோனாவைக் கண்டறிய புதிய பரிசோதனை முறை!

author img

By

Published : Jul 7, 2020, 7:42 PM IST

கரோனா பரிசோதனையின் கட்டணத்தைக் குறைக்கும் வண்ணமாக பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று புதிய பரிசோதனை முறையை கண்டறிந்துள்ளது.

பரிசோதனை முறை
பரிசோதனை முறை

உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் மிதவேகத்தில் அதிகரித்துவருகிறது. கரோனாவைக் கட்டுப்படுத்த அதற்கான பரிசோதனையை அதிகப்படுத்தவேண்டும். ஒவ்வொரு மாநிலங்களிலும் முறையான பரிசோதனைகளால்தான் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியும்.

அதிக பரிசோதனைகள் செய்யும்போது, பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்க முடியும். கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்தினாலும் அதனுடைய கட்டணம் சாமானியர்களை கரோனா பரிசோதனைக் கண்டு அஞ்ச செய்கிறது. கரோனா பரிசோதனை நடத்துவதற்கு தேவையான கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிக மதிப்பில் வாங்குவதால் அதனுடைய கட்டணமும் உச்சத்திலேயே இருக்கிறது.

தற்போது கரோனா பரிசோதனை செய்ய பயன்படுத்தப்படும் ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையின் கட்டணம் சற்று அதிகம்தான். இதனைக் கருத்தில் கொண்டு பெங்களூரைச் சேர்ந்த விஎன்ஐஆர் நிறுவனம் குறைந்த செலவில் கரோனா பரிசோதனை செய்வதற்கான புதிய முறையை ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலாக்கத்தைப் பயன்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொண்டால் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள கட்டணத்தை 30 விழுக்காடு வரை குறைக்க முடியும்.

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை என அழைக்கப்படும் இந்த பரிசோதனை ஆய்வகத்தில் ஆர் என் ஏவை டிஎன் ஏவாக மாற்றும் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது. இதனுடைய செயலாக்கத்தில் மூலக்கூறு அடிப்படையில் விஎன்ஐஆர் நிறுவனம் ஒரு புதுமையை புகுத்தியுள்ளது

ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் ஏற்படுத்தப்பட்ட இந்த புதிய முறை ஒலிகோ, என்சைம்கள் மற்றும் மாலிக்குலர் ப்ராப் ஆகிய மூன்றின் மூலமாக செயல்படும். குறைந்த செலவில் மூலக்கூறு ஆய்வை விஎன்ஐஆர் நிறுவனம் செயல்படுத்தியுள்ளாதாகக் கூறும் அந்நிறுவன இணை நிறுவனர் டாக்டர் கோவிந்தராஜூ, “முதலில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் 32 விழுக்காடு முக்கியத்துவம் வாய்ந்த மாலிக்குலர் ப்ராப்பை (molecular prob) இறக்குமதி செய்யவேண்டும். மாலிக்குளார் ப்ராப் ஒரு மில்லிகிராம் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை இருக்கும்.

குறிப்பாக, இந்த பரிசோதனைக்கு முறையான அனுமதியை பெறவேண்டும். உள்நாட்டில் இதனை உற்பத்தி செய்வதான சோதனைக்கான செலவுகள் 30 முதல் 40 விழுக்காடு வரை குறையும். இந்த பரிசோதனைக்கு காப்புரிமையைப் பெறுவதற்காக முயற்சி செய்கிறோம். ” என்றார்.

இதையும் படிங்க: ஹைதராபாத்தில் கரோனா தடுப்பூசி பரிசோதனை பணிகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.