மும்பையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் அக்டோபர் 22ஆம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. மூன்று மாடி கட்டிடத்தின் இரண்டாவது தரை தளத்தில் பிடித்த தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து 3500 பேர் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே, தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்பு துறையினர், கடந்த 56 மணி நேரமாக தீயை அணைக்க போராடினர். இறுதியாக, இன்று தீ அணைக்கப்பட்டது.
இதுகுறித்து தீயணைப்பு வீரர் ஒருவர் கூறுகையில், "பெரிய அளவில் பரவிய தீயை பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்துள்ளோம். 14 தீயணைப்பு வாகனங்கள், 17 டாங்கர்களை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தோம்" என்றார்.