புதுச்சேரியில் உள்ள ஏனாம் பகுதியில் பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கவில்லை என்றும் ஏனாதி பகுதியில் ஜிப்மர் மருத்துவமனை கொண்டுவருவதற்கான கோப்புகளுக்கு அனுமதி வழங்காமல் ஆளுநர் கிரண்பேடி மக்களை ஏமாற்றி வருவதாகவும் அத்தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் குற்றச்சாட்டு எழுப்பி வந்தார்.
இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி, யாரிடமும் தகவல் தெரிவிக்காமல் திடீரென ஏனாம் பகுதியில் ஆய்வு செய்வதற்காக வந்திருந்தார். அப்போது, அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், அவரின் வீட்டில் கறுப்புக்கொடி ஏந்தியும் கறுப்புச்சட்டை அணிந்தும் தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
மேலும், ஏனாம் பகுதி மக்கள் பலரும் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி, கறுப்பு பலூனை பறக்கவிட்டு தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதன் மூலம் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமலிருக்க புதுச்சேரி காவலர்கள் மட்டுமல்லாது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் மக்களின் எதிர்ப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளை கிரண்பேடி ரத்து செய்துள்ளார்.
இதையும் படிங்க: நடிகர், நடிகைகளுக்கு டிஜிட்டல் மொட்டை - வேளாங்கண்ணியில் களைகட்டும் சலூன் தொழில்!