டெல்லி மாநில பாஜக தலைவரும், மக்களை உறுப்பினருமான மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இவரின் தொலைபேசிக்கு ஜூன் 23ஆம் தேதி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதனை நேற்று மாலை பார்த்துவிட்டு அதிர்ச்சியடைந்த மனோஜ் திவாரி உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மனோஜ் திவாரி கூறுகையில், "அடையாளம் தெரியாத நபர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். தேவையெனில் பிரதமர் மோடியைக் கூட கொன்றுவிடுவேன் என அடையாளம் தெரியாத நபர் தெரிவித்தார். அவர் இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதால்தான் என்னை கொல்ல உள்ளதாக அவரே கூறினார்" என்றார்.
கொலை மிரட்டல் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் நீலகண்ட் பக்ஷி தெரிவித்துள்ளார்.