ETV Bharat / bharat

ராஜஸ்தான் களேபரம்; அம்பலமான பாஜகவின் ஜனநாயக விரோத செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

டெல்லி: ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் அசோக் கெலாட் அரசை கவிழ்க்க பாஜக சதித்திட்டம் தீட்டுகிறது என்பதற்கு மத்திய அமைச்சரின் ஆடியோ டேப்பே போதுமானதென காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் களோபரம் : அம்பலமான பாஜகவின் ஜனநாயக விரோத செயல் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

author img

By

Published : Jul 19, 2020, 12:27 AM IST

கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியிலும், கட்சியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இருவருக்கும் இடையேயான மோதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, அதிருப்தியில் இருக்கும் சச்சின் பைலட்டின் ஆட்சி மற்றும் கட்சி பொறுப்புகளை காங்கிரஸ் மேலிடம் பறித்ததையடுத்து, இந்த மோதல் உச்சம் தொட்டது.

ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியைக் கலைக்க முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பாஜகவின் மத்திய அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி செய்ததாக கூறப்பட்டது.

இந்நிலையில், பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் சேகாவத் மற்றும் அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ பன்வர்லால் சர்மா ஆகியோர் பேசிய ஆடியோ டேப் அண்மையில் வெளியானதை அடுத்து பாஜக இதன் பின்னணியில் இருப்பதாக செய்திகள் பரவின.

இது தொடர்பாக ஊடகங்களை காணொலி வாயிலாகச் சந்தித்து பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா," வெளியான ஆடியோ டேப்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக கோருவது வேடிக்கையாக உள்ளது.

அதிருப்தியில் உள்ள சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பின்னணியில் எந்த அரசியல் கட்சி இருக்கிறது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

ஜனநாயகத்திற்கு விரோதமாக "குதிரை பேரத்தில்" பாஜக ஈடுபடுவது அம்பலமாகியுள்ளது. கட்சியின் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டுவதற்கு வலுசேர்க்கும் விதமாக பைலட் உள்ளிட்ட மற்ற அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜக ஆட்சி செய்யும் ஹரியானாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தஞ்சம் புகுந்திருப்பதை யாரும் மறக்கவில்லை.

கடந்த வாரம் ஜனநாயகத்தை பகல் கொலை செய்ய பாஜக முயற்சித்ததை நாம் அனைவரும் கண்டோம். ராஜஸ்தானில் ஒருவித நெருக்கடியை உருவாக்குவதில் பாஜகவின் நேரடி தொடர்புகளை அம்பலப்படுத்த தினமும் ஒரு புதிய ஆதாரம் வெளிவருகிறது.

இது குறித்து விசாரணை மேற்கொள்ள சிறப்பு செயல்பாட்டுக் குழு ஹரியானாவுக்குச் சென்றிருந்தபோது ஹரியானா காவல் துறை அக்குழுவிற்கு ஒத்துழைக்கவில்லை

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து காங்கிரஸ் பதிலை எதிர்பார்க்கிறது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.