டெல்லியில் நடைபெற்ற 'ஐ லவ் கெஜ்ரிவால்' மாநாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவர் கோபால் ராய் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாரதிய ஜனதா கட்சி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசை எதிர்த்து வந்தாலும், மக்கள் முதலமைச்சர் கெஜ்ரிவால் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்.
மக்களால் தொடங்கப்பட்ட 'ஐ லவ் கெஜ்ரிவால்' பரப்புரை பயணத்தைக் கண்டு பாஜக வாயடைத்துப் போயுள்ளதாகவும் ஆம் ஆத்மிக்கும்-கெஜ்ரிவாலுக்கும் உள்ள செல்வாக்கு அவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும், இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோபால் ராய் தெரிவித்திருக்கிறார்.