வரும் நவம்பர் மாதத்துடன் பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவுபெறவுள்ளது. அங்கு ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பிடித்துள்ளன.
முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன.
இந்நிலையில், வரப்போகும் தேர்தலில் பாஜக தேர்தல் பொறுப்பாளாரக மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரான தேவேந்திர பட்னாவிசை அக்கட்சி களமிறக்கவுள்ளது. ஏற்கெனவே இந்தத் தேர்தலுக்காக 14 பேர் கொண்ட சிறப்புக் குழு ஒன்றை பாஜக நியமித்துள்ளது. இதில் பிகார் மாநில பாஜகவின் முக்கிய தலைவரும், அம்மாநில துணை முதலமைச்சருமான சுஷில் குமார் மோடி, பிகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், மத்திய இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் ஆகியோர் உள்ளனர்.
பாஜகவின் மைய நிர்வாகத்தின் விருப்பப்படி தற்போது தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: மூணாறு நிலச்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 56ஆக உயர்வு!