காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட செயற்குழுக் கூட்டம் காணொலி மூலம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய சோனியா காந்தி, வெறுப்புணர்வு, வகுப்புவாதம் போன்ற வைரஸை பாஜக நாட்டில் பரப்பிவருவதாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் பாஜக செயல்பட்டுவருகிறது. இது இந்தியர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கிறது. இந்த பாதிப்பை சரி செய்ய காங்கிரஸ் கடுமையாக உழைக்க வேண்டும். இந்தியர்களை கவலைக்குள்ளாக்கும் விவகாரங்கள் குறித்து பகிரவிரும்புகிறேன்.
கரோனாவை எதிர்த்து ஒன்றிணைந்து போராட வேண்டிய இச்சூழலில் வெறுப்புணர்வு, வகுப்புவாதம் போன்ற வைரஸை பாஜக பரப்பிவருகிறது" என்றார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி என பல முக்கிய நிர்வாகிகள் காணொலி மூலம் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: இனி மருத்துவர்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை, 5 லட்சம் வரை அபராதம்: மத்திய அரசின் அவசர சட்டம்!