ETV Bharat / bharat

பாஜக செய்தித் தொடர்பாளருக்கு கரோனா? - கரோனாவால் பாதிக்கப்பட்ட பாஜக தலைவர்

டெல்லி: பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ராவுக்கு கோவிட்-19 தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

BJP spokesperson Sambit Patra
BJP spokesperson Sambit Patra
author img

By

Published : May 28, 2020, 2:09 PM IST

பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் அக்கட்சியின் முக்கிய இளம் தலைவர்களில் ஒருவருமான சம்பித் பத்ரா, பல்வேறு ஹிந்தி செய்தி தொலைக்காட்சிகளில் பாஜகவின் முகமாகத் திகழ்பவர்.

கோவிட்-19 தொற்றை மத்திய அரசு சிறப்பாகக் கையாளவில்லை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தபோது, அவர்களுக்கு எதிராகவும் பாஜக அரசுக்கு ஆதரவாகவும் பேசியவர்.

இந்நிலையில், அவருக்கு கோவிட்-19 தொற்றின் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து குர்காம் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும் இதுகுறித்து பாஜக தரப்பிலிருந்தோ, சம்பித் தரப்பிலிருந்தோ எவ்வித அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: உயிருக்குப் போராடும் சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.