ETV Bharat / bharat

மாநிலங்களவைத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு - மாநிலங்களவைத் தேர்தல்

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது.

BJP
BJP
author img

By

Published : Mar 11, 2020, 11:19 PM IST

மாநிலங்களவைத் தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா அப்பட்டியலில் இடம்பெற்றுள்ளார். பாஜகவை சேர்ந்த 11 பேரையும், கூட்டணி கட்சிகள் இரண்டு பேரையும் வேட்பாளராக அறிவித்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரை மாநிலத் தலைவர் தீபக் பிரகாஷ், ரமிலாபேன் பாரா ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்திலிருந்து அபய் பரத்வாஜ், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து உதயன் ராஜே போஸ்லே, கூட்டணி கட்சி வேட்பாளராக ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக வேட்பாளர் பட்டியல்
பாஜக வேட்பாளர் பட்டியல்

பிகார் மாநிலத்திலிருந்து விவேக் தாகூரும், அசாம் மாநிலத்தில் கூட்டணி கட்சி வேட்பாளராக பிஸ்வஜித் டைய்மாரியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ராஜேந்திர கெலாட் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பட்டியலை கட்சியின் மத்திய தேர்தல் பணிக் குழு தயாரித்ததாக தேசியச் செயலாளர் அருண் சிங் தெரிவித்தார்.

கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல்
கூட்டணி கட்சி வேட்பாளர் பட்டியல்

இதையும் படிங்க: பாஜகவில் இணைந்த சிந்தியாவுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.