காஷ்மீரில் பயங்கரவாதிகளால் மூன்று பாஜக தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து பாஜக இளைஞர் பிரிவு உள்ளிட்ட சில அமைப்புகள் காஷ்மீரில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டன. இந்தப் போராட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதாக குற்றம்சாட்டி அவர்கள் பாகிஸ்தான் நாட்டின் கொடியை எரித்தனர்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமை மாலை தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் ஒய் கே போரா பகுதியில் ஃபிடா உசேன், உமர் ஹஜாம், உமர் ரஷீத் பீக் என்ற பாஜகவை சேர்ந்த மூன்று தொழிலாளர் பயங்கராவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.