முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி 1980ஆம் ஆண்டு நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரின் 39ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
அவரின் நினைவிடத்திற்குச் சென்ற அவரின் மனைவியும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தி, அவரின் மகன் வருண் காந்தி ஆகியோர் அவருக்கு மரியாதை செலுத்தினர்.
அவசரநிலை பிரகடனத்தின்போது எடுக்கப்பட்ட பல முடிவுகள் சஞ்சய் காந்தியின் மேற்பார்வையில் எடுக்கப்பட்டதாக பரவலாக கருத்து உள்ளது.