இந்தியாவில் கடந்த 25ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மகராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பிகார் உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழையால் தொடர்ந்து கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பிகாரில் பெய்துவரும் கனமழையால் அம்மாநில மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், பாட்னாவில் மட்டும் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் வெள்ளத்தில் வீடுகளை இழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் தேசிய பேரிடர் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பிகாரில் மட்டும் இதுவரை 42 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பிகாரின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ராம் க்ரிப்பால் யாதவ், மாநிலத்தின் தலைநகரமான பாட்னாவில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டக்கும் பணியில்தான் முதலமைச்சர் நித்திஷ் குமார் அரசு மும்முரம் காட்டி வருகிறது, கிராமங்களை இவர்கள் கவனிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பிகார் மாநிலத்தில் 2013-2017 ஆம் ஆண்டு வரை நித்திஷ் குமாரின் ஜனதா தள் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: ’காமராஜர் நகர் இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்’