ஜம்மு-காஷ்மீர் லடாக் பகுதியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, நம்கியால் என்ற சிறுவன் பாதுகாப்பு படையினரை நோக்கி சல்யூட் அடித்தார். இது வீடியோ பதிவாக சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சந்திரசேகர் அச்சிறுவனின் பெற்றோரை சந்தித்து ரூ. 2.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். இது குறித்து ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்ட அறிக்கையில், "பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினரை நோக்கி சல்யூட் அடித்த நம்கியால் ஒட்டுமொத்த நாட்டின் அன்பையும் மதிப்பையும் பெற்றுள்ளார்.
அச்சிறுவனின் நாட்டுப்பற்று அவருக்கு உதவி செய்ய பலரை ஊக்குவித்துள்ளது. பிளாக் ஆஃப் ஹானர் என்ற பவுண்டேசன் மூலம் அவருக்கு 2.5 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளேன்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.