இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் அவர், " நீட், ஜே.இ.இ. போன்ற நுழைவுத்தேர்வுகளை எழுதவுள்ள மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள். நீங்கள் இத்தகைய கடுமையான சூழ்நிலையில் தேர்வுகளை எதிர்கொள்வது என்பது கொடூரமானது. கடவுள் உங்களுடன் இருக்கட்டும்" எனக் கூறியுள்ளார்.
2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில இந்திய அளவிலான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்பட்டுவருகிறது.
கரோனா நெருக்கடிக்கு மத்தியில் இந்தாண்டும் நீட் தேர்வு திட்டமிட்டப்படி செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்ததை அடுத்து நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து கடும் அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்துள்ளார்.
தமிழ்நாட்டின் கோவை, ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடா பகுதிகளைச் சேர்ந்த இரு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டது கவனிக்கத்தக்கது.
2016ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் 2019ஆம் ஆண்டு மோனிஷா, ரித்துஸ்ரீ, வைஷியா ஆகிய மாணவிகளும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.