இந்திய ரிசர்வ் வங்கி, கடன் வாங்கி திரும்ப செலுத்தாதவர்கள் குறித்த முக்கிய அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதன்படி, வங்கியில் வாங்கிய கடனை செலுத்த முடியாதவர்களாக தாங்களே முன்வந்தவர்களாக அறிவித்த 50 பெருநிறுவன முதலாளிகளின் கடன்தொகை 68 ஆயிரம் கோடி ரூபாயை ரிசர்வ் வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்தப் பட்டியலில் நீரவ் மோடி, முகுல் சோக்சி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில், ”இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளிக்கவில்லை.
தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள பட்டியலில் உண்மை வெளிவந்துள்ளது. பாஜக அரசு தனது நண்பர்களான நீரவ் மோடி, முகுல் சோஸ்கி ஆகியோரின் கடனைத் தள்ளுபடி செய்து நாடாளுமன்றத்தில் கள்ளமௌனம் சாதிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவை ஏலம் கேட்க காலக்கெடு நீட்டிப்பு