இந்திய அரசின் சார்பில் ட்ரம்புக்கு வழங்கும் விருந்து நிகழ்வில் பங்கேற்க மத்திய அரசின் சார்பில், நான்கு நாட்களுக்கு முன்பு மாநில முதல்வர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரான மன்மோகன் சிங், தற்போது அவரது உடல்நிலையைச் சுட்டிக்காட்டி விருந்திலிருந்து விலகியுள்ளார்.
ட்ரம்பிற்கு அளிக்கப்படும் விருந்து நிகழ்வில் பங்கேற்க முடியாததற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தனது வருத்தங்களை இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் மாளிகைக்குத் தகவல் தெரிவித்தார். இந்திய அரசின் மரபின்படி, வெளிநாட்டிலிருந்து அரசுமுறை பயணம் வரும் தலைவர்கள், இந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ள அதிபர் டிரம்பிற்கும், எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் எந்தவொரு சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படவில்லை. இதுபோன்ற வெளிநாட்டு வருகைகளின் போது, பாரம்பரியமாக இருந்த மரபை காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டு, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவையின் காங்கிரஸ் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும், இந்தியக் குடியரசின் மாளிகையின் (ராஷ்டிரபதி பவன்) நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரியவந்திருக்கிறது.
ட்ரம்பிற்கான இந்திய அரசின் விருந்து நிகழ்வில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி புறக்கணிக்கப்பட்டதால், அக்கட்சியின் முக்கிய தலைவர்களும் விருந்து நிகழ்விலிருந்து தங்களை விலக்கி கொள்ள திட்டுமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆகியோர் இடையே நாளை டெல்லியில் முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிபரின் மனைவியான மெலனியா டிரம்ப், டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிக்குச் சென்று ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்திய "மகிழ்ச்சி வகுப்பை" பார்வையிடவுள்ளார்.
இந்த நிகழ்வில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது அமைச்சரவை முக்கிய தலைவரான மனிஷ் சிசோடியாவும் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், இதிலிருந்து அவர்கள் திடீரென நீக்கப்பட்டுள்ளனர். மெலனியா டிரம்பின் இந்த நிகழ்வு, அரசியல் ரீதியாக இருக்கக்கூடாது என்பதற்காகவே பெயர் நீக்கப்பட்டுள்ளதாக டெல்லி அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : அயோத்தியில் மசூதி கட்ட ஐந்து ஏக்கர் நிலம்: சன்னி வஃக்பு வாரியம் ஏற்பு