பிகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் மூன்று கட்டமாக நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
அதன்படி மொத்தம் 243 தொகுதிகளுக்கு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய நாள்களில் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு தேர்தல்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி பரிஷத் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கடைசி நேரத்தில் ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக ஜனசக்தி பரிஷத் கட்சி போட்டியிட முடிவெடுத்துள்ளது.
இருப்பினும் பாஜக போட்டியிட உள்ள தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கப் போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.
இதற்கிடையே, விகாஸில் இன்சான் கட்சி பாஜக கூட்டணியில் இணைந்துள்ளது. அதற்கு பாஜக பங்கிலிருந்து 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகுதி பங்கினை பிகார் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பின் போது, பிகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், விஐபி கட்சித் தலைவர் முகேஷ் சாய்னி ஆகியோர் உடனிருந்தனர்.
மேலும், விஐபி கட்சிக்கு பிகார் சட்ட மேலவையில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் என ஜெய்ஸ்வால் அறிவித்தார்.
இதையும் படிங்க: அரசியலுக்காக அரசு வேலையை கைவிட்ட இந்திய வீராங்கனை