உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் குல்தீப் சிங் பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி விபத்துக்குள்ளானார். இந்த விபத்திலும் குல்தீப் சிங்குக்கு சம்பந்தம் இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசு வழக்குப்பதிவு செய்தது.
இவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு அதிகமான நிலையில், குல்தீப் சிங்கை கட்சியிலிருந்து நீக்கி பாஜக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.