குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றுவருகிறது. டெல்லியில் இந்த மசோதாவிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தப் போராட்டம் நேற்று கலவரமாக மாறியது. பேருந்துகள் எரிக்கப்பட்டன, ஏராளமான மாணவர்கள் காவல்துறையினரால் மூர்க்கமாக தாக்கப்பட்டனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான டெல்லி மாணவர்களின் போராட்டம் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. மாணவர்கள் போராட்டம் வன்முறையானது குறித்து டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், பேருந்து எரிவதற்கு முன் காவல்துறை சீருடை அணிந்த இந்த நபர்கள் வெள்ளை, மஞ்சள் கேன்களில் எதை வண்டிக்குள் கொட்டுகிறார்கள்? யாருடைய கட்டளைப்படி இது அத்தனையும் நடத்தப்பட்டது? காவல்துறையினரை வைத்து தீமூட்டி பாஜக மட்டமான அரசியல் செய்திருப்பது இந்த புகைப்படங்களின் மூலம் தெரிகிறது என ட்வீட் செய்துள்ளார்.
ஆரஞ்சு நிற சட்டை, ஜீன்ஸ் பேன்ட் அணிந்து மாணவர்களை தாக்குவது காவல்துறையினர் அல்ல அடியாட்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக லண்டனில் போராட்டம்!