ETV Bharat / bharat

நாடாளுமன்றம் செல்லும் 25 வயது இளம்பெண்! - chandrani murmu

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த சந்திராணி முர்மு மக்களவைக்கு செல்லும் இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

சந்திராணி முர்மு
author img

By

Published : May 26, 2019, 1:30 PM IST

இந்தியா முழுவதும் 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 23ஆம் தேதி நிறைவுற்றது. அதனைத்தொடர்ந்து மே 23 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பாஜக கூட்டணி 350 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. இதனையடுத்து மக்களவைக் குழுத் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மோடி வருகின்ற 30ஆம் தேதி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதிவியேற்க உள்ளார்.

மேலும், 17ஆவது மக்களவைத் தேர்தலில் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல்போல் அல்லாமல் இந்த முறை பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் நடிகைகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், இளம் வயது பெண்கள் என 76 பெண்கள் மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ஒடிசா மாநிலத்தில் 25 வயதே ஆன சந்திராணி முர்மு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கியோஞ்சர் பகுதியைச் சேர்ந்த இவர் உயிரி தொழில்நுட்பம் (பி.டெக்.) பட்டதாரி படிப்பை முடித்துவிட்டு அரசு வேலைக்காக காத்திருந்தார்.

சந்திராணி முர்மு தனது சிறுவயது முதலே சமூக சேவை செய்வதில் அதிக ஆர்வமுடையவர். இதனால் கால நேரம் பார்க்காமல் சமூகப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இந்தச் சூழலில் தனது உறவினரின் அறிவுறுத்தலின்படி பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்து கியோஞ்சர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனந்த நாயக் கியோஞ்சர் தொகுதியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார். அவரை தோற்கடிப்பது சந்திராணி முர்முக்கு அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால் கனவில் நினைத்து பார்க்காத வெற்றி. ஆனந்த நாயக்கை சந்திராணி முர்மு 66,203 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அமோக வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் சந்திராணி முர்மு மக்களவைக்கு செல்லும் இளம் வயது பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவரது வெற்றி அசாதாரண வெற்றி அல்ல. இந்தியாவில் மூலை முடுக்குகளில் அரசியலில் சாதிக்க துடிக்கும் பெண்களுக்கு உத்வேகத்தை தரும். பெண்கள் படிப்பறிவையும் தாண்டி அரசியலில் அதிக ஆர்வம் காட்டி வருவது இந்திய மக்களை வியக்க வைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.