புதுச்சேரி அறிவியல் மன்றங்கள், சுற்றுச்சூழல் அமைப்பு ஆகியவற்றின் சார்பில் பறவைகள் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அறிவியல் மன்றங்கள், யுனிவர்சல் சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பறவைகள் பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுவருகிறது. 2020ஆம் ஆண்டின் சர்வதேச கருப்பொருளாக ’பறவைகளைப் பாதுகாப்போம்’ என்ற தலைப்பில், பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி வரும் ஜனவரி மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது.
மேலும், பறவைகள் தொடர்பான புத்தகங்கள் மூலமும் அவற்றின் ஓசையை பறவைகளின் படங்களின் வழியாகவும் காட்டி விளக்கம் வழங்கப்பட உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களும் ஆர்வமுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdmcBbcy15N2pgh-RZ8_GcYDXYSNl1cM1JDj1Jbg0MSi62LHw/viewform?usp=pp_url இந்த லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடத்த முயன்ற 3 வெளிநாட்டுப் பறவைகள் வனத்துறை மூலம் மீட்பு